இரும்புத்தலை நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்
இரும்புத்தலை நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
இரும்புத்தலை நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, இரும்புத்தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.
திறக்க கோரிக்கை
கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர். விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து இரும்புத்தலை அரசு கொள்முதல்நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.