கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா...? - அமைச்சர் எ.வ.வேலுவை கிண்டல் செய்த ஜெயக்குமார்
கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை காசிமேடு துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது.
தரமான பொருள் கொடுத்தால் மக்கள் ஏன் குறை செல்லகிறார்கள். எங்கள் ஆட்சி காலத்தில் உருகிய வெல்லம், பப்பாளி விதை அல்லது பூச்சி அரித்த அரிசியா கொடுத்தோமா, இல்லை ஒரு துண்டு கரும்பு கொடுத்தோமா. முழு கரும்புதான் கொடுத்தோம்.
அரசுக்கு நிர்வாக அனுபவம் இல்லை என்பதற்கு முழுமையான ஒப்புதல் வாக்கு மூலமாகத்தான அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்து உள்ளது.
விவசாயிகள் நம்பி கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா. இதனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து ரேசன் கடைமூலம் பெங்கலுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.