இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x

வீரவநல்லூரில், வாறுகால்- சாலைகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரவநல்லூர் பேரூராட்சியில், கம்பளத்தம்மன் கோவில் அருகே உள்ள வாறுகால் மற்றும் அப்பகுதியில் உள்ள குறுகிய சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், வாறுகால் மற்றும் சாலையை சீரமைத்து தரக்கோரியும் அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், வாறுகால் மற்றும் சாலைகளை இசக்கி சுப்பையாஎம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

அம்பை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி, உதவி பொறியாளர் முத்துமணி, சாலை ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், நகரச் செயலாளர்கள் வீரவநல்லூர் முருகேசன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்தனம், ஆறுமுகம் மற்றும் சந்திரா ஆகியோர் இணைந்து, இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்களின் கேரிக்கையான 18 வார்டுகளுக்கும் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினர். மேலும் 12-வது வார்டில் அங்கன்வாடி அமைத்து தரவும், 6-ல் வடக்கு தெருவில் பாலம் மற்றும் படித்துறையை சீரமைக்க கோரிக்கை வைத்தனர். வடக்கு அய்யனார் தெரு பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் சிதம்பரம் கோரிக்கை வைத்தார்.

இசக்கி சுப்பையா தனது தேர்தல் வாக்குறுதியின்படி, சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை அம்பை தொகுதியில் உள்ள ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார். அதன்படி அம்பை பகுதியைச் சேர்ந்த 13 மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.89 ஆயிரத்து 500 கல்வி உதவித்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேரை மாரிசெல்வம், அம்பை விஜயபாலாஜி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மதனகிருஷ்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story