தொழிலாளர்களுக்கு பனையேறும் உரிமம் வழங்கல்
மணப்பாடு குடியேற்றில் தொழிலாளர்களுக்கு பனையேறும் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மணப்பாடு புதுக்குடியேற்றில் பனை வாரியம் சார்பில் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனையேறும் உரிமம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை வகித்து பனைத் தொழிலாளர்களுக்கு பனையேறும் உரிமம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.
உடன்குடி வட்டார பனைவாரிய மேலாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் புதுக்குடியேற்று செல்வகுமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகேஸ்வரன், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story