குளத்தில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பெற்றோர் புகார்


குளத்தில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பெற்றோர் புகார்
x

குளத்தில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பெற்றோர் புகார்

நாகப்பட்டினம்

ஆசிரியர் திட்டியதால் குளத்தில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்ைக எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார்.

மாணவி

நாகூர் அருகே தெத்தி சிவசக்தி நகரை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் நேத்ராஸ்ரீநிதி (வயது14). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கணிதம் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றார்.

இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச்சொன்னார். இதையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் தேர்வு தாளில் கையெழுத்து வாங்கி வந்து கொடுத்தார். அப்போது சக மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் நேத்ராஸ்ரீநிதியை திட்டியதாவும், பெற்றோரிடம் செல்போன் மூலம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

குளத்தில் குதித்து சாவு

இதனால் மனமுடைந்த நேத்ராஸ்ரீநிதி நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் தனது புத்தக பையை வைத்துவிட்டு தண்ணீரில் குதித்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நாகப்பட்டினம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து மாதவன் கொடுத்த புகாரின்பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை வாங்க மறுப்பு

இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது நேத்ராஸ்ரீநிதி இறப்புக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் தான் காரணம். எனவே ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர்.

நடவடிக்கை

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேணுகோபால், பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் நேத்ராஸ்ரீநிதியின் உடலை வாங்கிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story