நிலையான முடிவு எடுக்கமுடியாத அரசின் கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது வேதனைக்குரியது - எடப்பாடி பழனிசாமி டுவீட்


நிலையான முடிவு  எடுக்கமுடியாத அரசின் கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது வேதனைக்குரியது - எடப்பாடி பழனிசாமி டுவீட்
x
தினத்தந்தி 25 April 2023 4:49 PM IST (Updated: 25 April 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது வேதனைக்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது வேதனைக்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில்

LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.


Next Story