ஒரு மணி நேரம் கன மழை கொட்டிதீர்த்தது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்


ஒரு மணி நேரம் கன மழை கொட்டிதீர்த்தது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்
x

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மரியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மரியலில் ஈடுபட்டனர்.

மழைநீர் புகுந்தது

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பத்தூரில் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூரில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு இதுவரை சாலை அமைக்காத பல்வேறு தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. கலெக்டர் அலுவலகம் எதிரே பெரிய ஏரி நீர் மற்றும் கழிவுநீர் கலந்து தார் சாலையில் வெள்ளம் போல தேங்கி நின்றது இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் மழை நீரை அப்புறப்படுத்தினர். திருப்பத்தூர் நகராட்சி 18-வது வார்டு கச்சேரி தெரு பகுதியில் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களிலும், 19-வது வார்டு சாமி செட்டி தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயிலும் அடைப்பு இருந்ததால் 18-வது வார்டில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.

சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் 18-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் டி.என்.டி. கே.சுபாஷ், டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சரி செய்வதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோன்று திருப்பத்தூர் அருகே துரை நகர் பகுதி-1 பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், லேசான மழை பெய்தால்கூட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும் கூறி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர்.


Next Story