தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி


தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி
x
தினத்தந்தி 17 Aug 2023 1:45 AM IST (Updated: 17 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story