கடலூரில் 101 டிகிரி வெயில் கொளுத்தியதுபொதுமக்கள் அவதி


கடலூரில் 101 டிகிரி வெயில் கொளுத்தியதுபொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நேற்று 101.1 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்


கோடை காலம்

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 95 டிகிரிக்கும் மேலாகவே வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரத்தில் சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகளில் இருப்பவர்கள் மின்தடை ஏற்படும் நேரங்களில் கடும் புழுக்கத்தால் அவதியடைந்து வருகின்றனர்.

'அக்னி நட்சத்திரம்'

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலைகளில் பலர் குடை பிடித்தபடி நடந்து செல்வதையும் காண முடிகிறது. கடலூரில் பிரதான சாலைகள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கோடையின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் சாலையில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கடலூரில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து மதிய நேரத்தில், அதிக தாக்கம் காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் சாலையில் கானல் நீர் தோன்றியதையும் காண முடிந்தது. கடலூரில் நேற்று அதிகபட்சமாக 101.1 டிகிரி வெயில் பதிவாகியது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று தான் கடலூரில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் வெயிலின் கொடுமையாமல் பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


Next Story