தார் சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடத்த முடிவு


தார் சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடத்த முடிவு
x

தார் சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சலுப்பை கிராமத்தில் உள்ள அழகர் கோவில் வளாகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பிரமணியன், ராஜா பெரியசாமி முன்னிலை வகித்தனர். பொருளாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் வீராசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

மீன்சுருட்டி- கல்லாத்தூர் வரை உள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் நாற்று நடும் போராட்டமும் நடைபெற்றது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அவசர காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தார் சாலை அமைக்கக்கோரி வருகிற 27-ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story