கூடலூர் ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
கூடலூர் ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறசை்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி
கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் 406 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கால்நடைகளின் குடிநீருக்காவும் இந்த குளம் பயன்படுகிறது.
இந்நிலையில் கூடலூர் நகர பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து ஒட்டாண்குளம் மற்றும் அதன் கரை பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் குளத்தின் நீர் மாசடைகிறது. மேலும் கோழிக்கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கோழிக்கழிவுகளை ஒட்டாண்குளத்தில் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர்.
Related Tags :
Next Story