தமிழகத்தில் நடைபெறும் திராவிடமாடல் ஆட்சியை இந்திய நாடே திரும்பி பார்க்கிறது:கனிமொழி எம்.பி.


தமிழகத்தில் நடைபெறும்  திராவிடமாடல் ஆட்சியை   இந்திய நாடே திரும்பி பார்க்கிறது:கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெறும் திராவிடமாடல் ஆட்சியை இந்திய நாடே திரும்பி பார்க்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி

உடன்குடி:

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை இந்திய நாடே திரும்பிப் பார்க்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தெற்கு மாவட்டதி.மு.க. கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், எம்.எல்.ஏ., சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா, மாவட்ட பொருளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வரவேற்றார்.

கனிமொழி எம்.பி.-அமைச்சர்

கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி, யூனியன் துணை தலைவர் மீராசிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், பேருராட்சி துணைத் தலைவரும், நகர செயலாளருமான சந்தையடி யூர்மால் ராஜேஷ், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, காயல்பட்டணம் முத்து முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி த.லைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிட மாடல் ஆட்சி

இக்கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் 27-ந்தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில்,

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை இந்திய நாடேதிரும்பி பார்க்கிறது. மத்தியிலுள்ள பா.ஜனதா அரசு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது, என்றார். ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் நன்றி கூறினார்.


Next Story