குற்றச்செயல்களில்ஈடுபடும்சிறுவர்களைநல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு: போலீஸ் சூப்பிரண்டு


குற்றச்செயல்களில்ஈடுபடும்சிறுவர்களைநல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்செயல்களில்ஈடுபடும்சிறுவர்களைநல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் தூத்துக்குடி கால்டுவேல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து 'பள்ளிக்கு திரும்புவோம்' என்ற பெற்றோர் - மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் பலர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தங்களது வருங்காலத்தை தொலைத்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி முழுமை பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

பெற்றோருக்கு பொறுப்பு

மேலும், 16, 17 வயது முழுமையான பக்குவமடைந்த வயதல்ல. இந்த வயதில் உள்ள சிறுவர்களை குற்றங்கள் செய்வதை தடுத்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமுதாயத்துக்கு உள்ளது. போலீஸ் துறை மூலமாக பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய தூத்துக்குடி நகர துணை கோட்ட பகுதியில் 205 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அதில் கல்வியை இடை நிறுத்திய 60 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை வரவழைத்து கல்வியின் முக்கியத்துவத்தையும், நல்வழிப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையையும், கல்விக்கும் ஏற்பாடு செய்து, அவர்கள் தவறு செய்தால் சுட்டிகாட்டி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,405 இடங்களில் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுமார் 71 ஆயிரம் பொதுமக்கள் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதற்கு உறுதிமொழி ஏற்று உள்ளனர். அதேபோன்று பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் போலீசாரால் ஏற்படுத்தப்பட்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி, பள்ளி செல்லா குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், பள்ளி தாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம், தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story