பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான் - திருமாவளவன் பேட்டி


பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான் - திருமாவளவன் பேட்டி
x

பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை,

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வருகிற செப்டம்பர் 28ம் தேதி மதுரையிலும், அக்டோபர் 8ம் தேதி கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து "சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்" என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது".

பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான். சனாதான எதிர்ப்பாளியாக பிரதமர் மோடி வந்தால் அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்,சமூகப் புறக்கணிப்பு என்பது பெரிய கொடுமை. பள்ளி பிள்ளைகள் மீது சாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story