ஐ.வி.எல். பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை
இருமத்தூர ஐ.வி.எல். பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் இருமத்தூரில் உள்ள ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவன் எஸ்.சென்னகேசவன் பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவி கே.அறிவுக்கரசி 2-ம் இடத்தையும், மாணவன் கே.எஸ்.பிரத்திஷ் 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் இப்பள்ளியில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 550-க்கு மேல் 14 பேரும், 500-க்கு மேல் 47 பேரும், 450-க்கு மேல் 55 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டி.கோவிந்தராஜ், பொருளாளர் எஸ்.விஜய லட்சுமி கோவிந்தராஜ், செயலாளர் வி.ஜெயந்தி வெங்கடேசன், முதல்வர் ஏ.சண்முகவேல், துணை முதல்வர் ஏ.அசோக் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.