பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான உரிமை மீட்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், அறிவழகன், செல்வகுமார், கணேஷ், சிங்காரம், தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் பொன்னிவளவன் சிறப்புரையாற்றினார்.தமிழ்நாடு தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் கோவிந்தன், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஷேக் மூஷா, கதிர்வேல், சுந்தர்ராஜன், செல்லையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானம்

மாநாட்டில் இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், எம்.ஆர்.பி. செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Next Story