ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாடு
மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாடு நடந்தது
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், சண்முகசுந்தரம், அசோக்குமார், செல்வம், அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்ட பொறுப்பாளர் சிவபழனி வரவேற்று பேசினார். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, காலவரையறையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்., சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.