ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்ட ஆயத்த கூட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்ட ஆயத்த கூட்டம்
x

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்ட ஆயத்த கூட்டம் வேலூரில் நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) போராட்ட ஆயத்த கூட்டம் வேலூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன், சகேயுசத்தியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அ.சேகர், ஷாநவாஸ், துரை.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்துக்கு ஆயத்தமாவது குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசினார்கள். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.


Next Story