ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்ட ஆயத்த மாநாடு


ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்ட ஆயத்த மாநாடு
x

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தனியார் திருமண அரங்கில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். காலி பணியிடத்தை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வைரமுத்து வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு உடற்கல்வி இயக்குனர் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.


Related Tags :
Next Story