புதுக்கோட்டையில் ஜெகநாதர் ரத யாத்திரை
புதுக்கோட்டையில் ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஓடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் திருவிழாவையொட்டி தேர்த்திருவிழா நடைபெறும். இதையொட்டி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் முதன் முறையாக ஜெகநாதர் ரத யாத்திரை நேற்று மாலை நடைபெற்றது. சாந்தநாத சாமி கோவில் அருகே இருந்து இந்த ரத யாத்திரை புறப்பட்டு கீழ ராஜ வீதி உள்பட கடை வீதி வழியாக சென்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சத்தியமூர்த்தி சாலையில் நிறைவடைந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பூரி ஜெகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் கிருஷ்ண பக்தி பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், கிருஷ்ண பக்தி இயக்க மண்டல மேலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story