முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு 4 ஆண்டு சிறை


முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்துள்ள ஆலங்குடி ஊராட்சி மேல மாகாணம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஆலங்குடி ஊராட்சியில் அப்போது தலைவராக இருந்த ராணி ஆரோனிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது அவரிடம் ராணி ஆரோன் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூபாய் 300 லஞ்சம் வழங்கும்படி கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணபதி இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்கள் ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ராணி ஆரோனை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி இன்ப கார்த்திக், குற்றம் சாட்டப்பட்ட ராணி ஆரோனுக்கு4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் புகார்தாரரான கணபதி மற்றும் சாட்சி கூறிய ராமசாமி ஆகிய இரண்டு பேரும் வழக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story