குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு


குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கத்தியால் குத்தி கொலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ராஜாவூர் கொல்லன்கொட்டாயை சேர்ந்தவர் அருணகிரி (வயது 50). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவருடைய மனைவி காஞ்சனாவிற்கும் (35) அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி ரூ.2 ஆயிரம் கொடுக்குமாறு அருணகிரி, காஞ்சனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது காஞ்சனா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணகிரி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காஞ்சனாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருணகிரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் அருணகிரி மீதான கொலை குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அருணகிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி சையத்பர்க்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.


Next Story