டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை


டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை
x

கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). கூலித்ெதாழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு இவர், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு இருந்த கடை ஊழியரான சக்திவேலிடம் இவர், இலவசமாக மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சக்திவேல் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அங்கு கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து சக்திவேல் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கொடைக்கானல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story