அஞ்செட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


அஞ்செட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருேக உள்ள அத்தக்கல்லை சேர்ந்தவர் சிவனாங்கி (வயது 30). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சிவனாங்கியை கைது செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story