கோவிலில் நகை திருடியவருக்கு சிறை-நாங்குநேரி கோர்ட்டு தீர்ப்பு


கோவிலில் நகை திருடியவருக்கு சிறை-நாங்குநேரி கோர்ட்டு தீர்ப்பு
x

கோவிலில் நகை திருடியவருக்கு சிறை தண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

ஏர்வாடி அருகே வேப்பங்குளத்தில் வன பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 1½ பவுன் தங்க பொட்டு, தாலியை திருடிய வழக்கில், வேப்பங்குளம் மேலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் (வயது 45) என்பவரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை நாங்குநேரி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிதம்பரம் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ஆதிநாராயணனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


Next Story