2 பேருக்கு சிறை தண்டனை
கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் வின்சென்ட் பவுல்ராஜ் (வயது 54), வில்லியம் ரொசா ரியோ (36). கடந்த 2016-ம் ஆண்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இவர்களை அதே பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி ஜான் கென்னடி (36), சேசுராஜ் (32) ஆகியோர் அரிவாளால் வெட்டினர்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று நீதிபதி ராமச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிசாமி ஜான் கென்னடி, சேசுராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story