ஏரியில் கஞ்சா பதுக்கி வைத்த 2 பேருக்கு சிறை தண்டனை


ஏரியில் கஞ்சா பதுக்கி வைத்த 2 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரிக்கரையில் கஞ்சாவை பதுக்கி வைத்த விற்ற 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 9.8.2021 அன்று விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு தலைமையிலான போலீசார், திருநாவலூருக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்தப் பையினுள் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் திருநாவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராமானுஜம் மகன் ராஜாமணி (வயது 23), நாராயணன் மகன் அய்யப்பன் (26) என்பதும், இவர்கள் இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

2 பேருக்கு சிறை

இதையடுத்து ராஜாமணி, அய்யப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள போதைப்பொருள் மற்றும் உளசார்புள்ள சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட ராஜாமணி, அய்யப்பன் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Next Story