மேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் சாவு


மேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் சாவு
x

மேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் உயிரிழந்தார்

மதுரை

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே டி.ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 33). இவர் சிமெண்டு கலவை எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். அந்த காளை பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் கட்டி வைத்திருந்த அந்த காளை, கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடியது. முனிசாமி அந்த காளையை பிடிக்க சென்றார்.. அப்போது அந்த காளை முனிசாமியை முட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரிக்கு ெசல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story