ஜல்லிக்கட்டு காளை திருட்டு
ஜல்லிக்கட்டு காளையை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்
மதுரை
மதுரை தத்தனேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பொன்னம்பலராஜதுரை. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அதற்கு பயிற்சியும் அளித்து வந்தார். சம்பவத்தன்று இரவு அந்த காளையை வீட்டின் முன்பாக கட்டி வைத்து இருந்தார். மறுநாள் காலை அவர் எழுந்து பார்த்த போது ஜல்லிக்கட்டு காளை காணவில்லை. மர்ம நபர் அந்த காளையை வண்டியில் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜல்லிக்கட்டு காளையை திருடிச் சென்றவர்களை தேடி வருகிறார்கள். மதுரை புறநகர் பகுதியில் இதே போன்று 2 ஜல்லிக்கட்டு காளை திருடப்பட்டதை தொடர்ந்து நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story