ஜல்லிக்கட்டு 19-ந்தேதிக்கு மாற்றம்
தவசிமடையில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு 19-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே தவசிமடையில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஒவ்ெவாரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் மாடு பிடிவீரர்கள் இன்ஸ்சூரன்ஸ் எடுப்பது தொடர்பாகவும், நிர்வாக காரணங்களாலும் ஜல்லிக்கட்டு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டி நடைபெறும் இடத்தில் வாடிவாசல், கேலரி அமைப்பு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தவசிமடை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story