தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி


தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்தது.

ஜமாபந்தி

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் அழகர்சாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று எடையூர் சரகத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் ஊராட்சி தொடர்பான கோரிக்கை மனுவை தாம்பூல தட்டில் வைத்து கலால் உதவி ஆணையரிடம் வழங்கினார்.

அந்த மனுவில் ஆற்றங்கரை தெருவில் சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆதிரங்கம்-தொலைக்காடு செல்லும் சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வலங்கைமான்

இதேபோல் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதில் வலங்கைமான் வருவாய் வட்டத்தில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு 94 மனுக்களை வழங்கினர். இதில் 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தியில் திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் அன்பழகன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதில் திருவீழிமிழலை வருவாய் சரகத்தைச் சேர்ந்த வயலூர், வடமட்டம், பரவக்கரை, திருவீழிமிழலை, விளாகம், அன்னியூர், செருகுடி, வடுகக்குடி, திருப்பாம்புரம், சுரைக்காயூர், ஆலத்தூர், கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், வெள்ளையதம்பார், விஷ்ணுபுரம் மருத்துவக்குடி சற்குணேஸ்வரபுரம் கூந்தலூர், மணவாளநல்லூர், தேதியூர், அதம்பார ்உக்கடை ஆகிய 21 கிராமங்ளுக்கு ஜமாபந்தி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். குடவாசல் தாசில்தார் குருநாதன், சமூக நலத் திட்ட தாசில்தார் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பொதுமக்கள் பட்டா மாறுதல், மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, வாய்க்கால் சீரமைப்பு போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் திருவீழிமிழலை சரக வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story