தண்டராம்பட்டில் ஜமாபந்தி தொடங்கியது
தண்டராம்பட்டில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஜமாபந்தி
தண்டராம்பட்டு தாலுகாவில் தண்டராம்பட்டு, வாணாபுரம், தானிப்பாடி ஆகிய உள் வட்டங்கள் உள்ளன. இந்த உள்வட்டங்களை சார்ந்த எடத்தனூர், தென்முடியனூர், அல்லப்பனூர், சாத்தனூர், தண்டராம்பட்டு, வீரணம், நெடுங்கவாடி, கன்னக்கந்தல், மலமஞ்சனூர், புத்தூர் செக்கடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி தண்டாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜமாபந்தியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தகுதியான மனுக்களை ஆய்வு செய்த கலெக்டர் உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல்ரகூப், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சக்கரை, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், தலைமை சர்வேயர் தரணிவாசன், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், முத்து, சிவலிங்கம், சபீனா சாலம்மாள், ஜெயந்தி, பொன்மலர், வெங்கடேசன், சி.முத்து, சித்ரா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போளூர்
போளூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமையில் மனுக்களை பெறப்பட்டன.
இதில் மொத்தம் 92 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார், ஆதிதிராவிடர் தாசில்தார் வைதேகி, மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, தலைமை சர்வேயர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன், மலையரசன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கம்
செங்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளான இன்று மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) வ.தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டார். தாசில்தார் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, துணை தாசில்தார்கள் துரைராஜ், தமிழரசி, வட்ட வழங்க அலுவலர் முனுசாமி, வருவாய் ஆய்வாளர் சீதா உள்ளிட்டோர் முன்னிலை வங்கித்தனர்.
மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்குட்பட்ட மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆண்டிப்பட்டி, நீப்பதுறை உள்பட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர் வ.தேன்மொழியிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை, வேளாண்மை துறை உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, முரளி, சத்யா, நேரு உள்பட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.