Normal
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர் தலைமை தாங்கினார். குருக்கள்பட்டி குறுவட்டத்திற்கான வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் தாசில்தார் பாபு, நிலவரி திட்ட தனி தாசில்தார் பாலசுப்ரமணியன், குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதிதா தேவி, மண்டல துணை தாசில்தார்கள் ராணி, கருப்பசாமி, சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் குருவைய்யா. கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story