நாங்குநேரி தாலுகாவில் ஜமாபந்தி


நாங்குநேரி தாலுகாவில் ஜமாபந்தி
x

நாங்குநேரி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி தாலுகாவில் நேற்று முன்தினம் ஜமாபந்தி தொடங்கியது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப் தலைமை தாங்கினார். முதல் நாளில் களக்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. அப்போது கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. 37 பேர் மனுக்கள் அளித்தனர். அதில் 7 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறும் உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து 14-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி செய்திருந்தார்.


Next Story