தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கழுகுமலை உள்வட்டம் ஜமீன் தேவர்குளம், கே. வெங்கடேஸ்வரபுரம், கழுகுமலை, வில்லிசேரி, இடைசெவல், வானரமுட்டி பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா முகாமிற்கு தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்கள் பெற்றார். அவரிடம் 32 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று (புதன் கிழமை) கழுகுமலை உள்வட்டம் நாலாட்டின் புத்தூர், முடுக்கு மீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள் வட்டம் முக்கூட்டு மலை, நக்கல முத்தன்பட்டி பகுதி மக்கள் தங்கள் குறைகளை ஜமாபந்தியில் மனுக்களாக கொடுக்கலாம்.
Related Tags :
Next Story