சென்னை: தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்
பணிமனை அருகே ஜனா சதாப்தி ரெயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சென்டிரலில் நேற்று இரவு 12 மணியளவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் ரெயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டுவரப்பட்டது.
பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே வந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ரெயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் தண்டவாள நிலைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story