திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை


திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பூமார்க்கெட்டுக்கு சுற்றுவட்டாரம் மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.400 வரை விற்பனை ஆனது. இந்தநிலையில் நேற்று மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை ஆனது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மல்லிகைப்பூ 'சீசன்' தற்போது நிலவி வருகிறது. இதையொட்டி நாள்தோறும் சுமார் 2 டன் அளவிற்கு மல்லிகை பூக்கள் விற்பனைக்கு வர வேண்டும். ஆனால் ஆங்காங்கே பெய்து வரும் மழை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் மல்லிகையின் உற்பத்தி குறைந்து போனது. இதனால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் மல்லிகைப்பூக்களின் வரத்து குறைந்து விட்டது.

இதுதவிர முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களால் மல்லிகையின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதன் விலை உயர்ந்துள்ளது என்றார். மேலும் மார்க்கெட்டில் (விலை கிலோவில்) ஜாதிப்பூ ரூ.400, முல்லை ரூ.250, ரோஜா ரூ.150, அரளி ரூ.130-க்கு நேற்று விற்பனை ஆனது.


Next Story