மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x

புத்தாண்டையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைபூ கிலோ ரூ.1,000 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி மல்லிகைப்பூவின் விலை 'கிடுகிடு' வென உயர்ந்து கிலோ ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரையில் நேற்று விற்பனை ஆனது. அதேபோல் ரூ.900-க்கு விற்பனை ஆன முல்லைப்பூ விலை அதிகரித்து கிலோ ரூ.1,500 வரையில் விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் (விலை கிலோவில்) ஜாதிப்பூ ரூ.1,500, கனகாம்பரம் ரூ.600, செவ்வந்தி, ரூ.80, காக்கரட்டான் ரூ.500, சம்பங்கி ரூ.100-க்கு நேற்று விற்பனை ஆனது.


Next Story