மல்லிகை பூ கிலோ ரூ.1,700-க்கு விற்பனை


மல்லிகை பூ கிலோ ரூ.1,700-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது. அதே சமயத்தில் பிச்சி, முல்லை பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது. அதே சமயத்தில் பிச்சி, முல்லை பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருேக உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கி ெசல்ல தினமும் ஏராளமான வியாபாரிகள் அதிகாலையிலேயே குவிவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும் மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.

தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிேலா ரூ.1,500க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.1,700க்கு விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும் போது, 'பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூவின் விளைச்சல் குறைந்துள்ளது. தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் 1,500 கிலோ முதல் 2,000 கிலோ வரை மல்லிகை பூக்கள் விற்பனைக்காக வரும். ஆனால் தற்போது 30 கிேலா முதல் 50 கிலோ வரை மட்டுமே பூக்கள் வருகிறது. இதனால் மல்லிகை பூவின் விலை உயர்ந்தது' என்றார்.

விலை விவரம்

அதே நேரத்தில் மற்ற பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1,150-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.400 குைறந்து ரூ.750-க்கு விற்பனையானது. இதுபோல் ரூ.1000-க்கு விற்பனையான முல்லை ரூ.700-க்கு விற்கப்பட்டது.

தோவாளை பூ மார்க்கெட்டில் ேநற்று விற்பனையான பிற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ- ரூ.220, கனகாம்பரம்- 400, வாடாமல்லி- ரூ.50, சிவப்பு கேந்தி -ரூ.65, சம்பங்கி-ரூ.170, ரோஜா (100 எண்ணம்) -ரூ.20, பட்டன்ரோஸ் - ரூ.130, துளசி-ரூ.30, தாமரை (100 எண்ணம்)- ரூ.1,500, பச்சை- ரூ.8, கோழிப்பூ- ரூ.40, கொழுந்து - ரூ.150, மருக்கொழுந்து- ரூ.130, மஞ்சள் கேந்தி- ரூ.60, சிவந்தி மஞ்சள் -ரூ.130, வெள்ளை சிவந்தி -ரூ.130, ஸ்டெம்புரோஸ் - ரூ.250 என விற்பனையானது.


Next Story