ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்


ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
x

அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய சார்பில் பிறந்தநாள் விழா பொது கூட்டம் பாளையம்பட்டி தேரடி திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்குஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், நகர அம்மா பேரவை செயலாளர் சோலை சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்டியன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், தலைமை கழக பேச்சாளர் இன்பரகன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாபா பாண்டியராஜன் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சி பதவியேற்ற உடன் முதலில் நிறுத்திய திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ஆகும். தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா பெயரில் இருந்து வந்த 28 நலத்திட்டங்களில் 20 நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. 50 ஆண்டுகளை தாண்டி அனைவரும் பேசக்கூடிய இயக்கமாக அ.தி.மு.க. வளர்ந்து வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம் செய்திருந்தார்.


Next Story