ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் - டி.டி.வி.தினகரன் பேட்டி


ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x

ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் - என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சி

திருச்சியில் நேற்று நடந்த அ.ம.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அ.தி.மு.க. தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம். பிளஸ்-2 பொதுத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுத வராத காரணத்தை அந்த துறையின் அமைச்சர் புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும்.அ.தி.மு.க.வில் 1 லட்சம் பழனிசாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதன்மூலம் அ.தி.மு.க.வில் 1 லட்சம் துரோகிகள் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டு விட்டார். அது சரிதான். பதவிக்காகவும், சொந்த பிரச்சினைக்காகவும் ஒரு சிலர் அ.ம.மு.க.வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சி மாறுகிறார்கள். 2013-ம் ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சியில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்தவர் ராகுல்காந்தி. இன்று அந்த சட்டத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story