ஆத்தூரில் ஜீப் டிரைவர் தற்கொலை


ஆத்தூரில் ஜீப் டிரைவர் தற்கொலை
x

ஆத்தூரில் ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெயேஷ் (வயது 42). இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நந்தினி. இந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், இவருக்கும், இவரது மனைவி நந்தினிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை வீட்டில் யாரும் இல்லாத போது ஜெயேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story