உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
x

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு யானை மீது வெள்ளிக்குடம் வைத்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. யானையை பின் தொடர்ந்து கோவில் பட்டர்களும் குடத்தில் புனித நீரை காலை 9.30 மணிக்கு கொண்டு வந்தனர். காலை 10 மணிக்கு கமலவல்லி நாச்சியார் தாயார் அங்கில்கள், நகைகளை ஒப்படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாச்சியார் தாயாரின் ஆபரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாலை 3 மணிக்கு கோவில் ஊழியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை.இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.


Next Story