ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை அபேஸ்
ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை அபேஸ்
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பொட்டல்விளை பகுதியை சேர்ந்தவர் சுஜிதா (வயது32). இவர் தனது குழந்தையுடன் மார்த்தாண்டத்தில் இருந்து பள்ளியாடி வழியாக குறும்பனைச் செல்லும் பஸ்சில் முருங்கைவிளை நிறுத்தத்தில் இருந்து ஏறினார். பஸ் சுப்ரமணியபுரம் பகுதியில் வந்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கண்டக்டரிடம் முறையிட்டார். தொடர்ந்து பஸ் கருங்கல் போலீஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் சோதனையிட்டனர். ஆனால் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து சுஜிதா பஸ் ஏறிய பகுதி தக்கலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுஜிதா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.