மூங்கில்துறைப்பட்டு அருகே மாரியம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை


மூங்கில்துறைப்பட்டு அருகே  மாரியம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை
x

மூங்கில்துறைப்பட்டு அருகே மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story