திருவெண்ணெய்நல்லூர் அருகேதொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் சிவசங்கரன் (வயது 43), கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடிசை வீட்டை பூட்டிவிட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரிக்கை அய்யனார் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்து போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. சிவசங்கரன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.