பெண்ணிடம் நகை-பணம் திருட்டு


பெண்ணிடம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

சங்கராபுரம் அருகே கீழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50) விவசாயி. இவர் தனது மனைவி சுதா (46) மற்றும் மகள், பேத்தியுடன் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்டு கட்டையின் மீது வைத்துள்ளார். சற்று நேரத்தில் திரும்பி பார்த்தபோது, பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, 2 வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் தத்தனரி செல்லூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மனைவி தமிழ்ச்செல்வி (55) மற்றும் இதே பகுதியை சேர்ந்த ராசு மனைவி மூக்காயி (70) ஆகிய இருவரும் நகை-பணத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வி, மூக்காயி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story