போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு


போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு
x

திருவண்ணாமலையில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபம் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், போலீஸ்காரர் ஒருவரது மனைவி என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story