இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை


இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை
x

சேலத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 31½ பவுன் நகையை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்

சூரமங்கலம்

சேலத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 31½ பவுன் நகையை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர்

சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கவிதா (வயது 40). இவர், சேலம் சித்தனூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இளநிலை உதவியாளராக உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர், கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

31½ பவுன் நகை கொள்ளை

பீரோவில் இருந்த 3½ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த சேலம் மேற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நகைகள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். நகைகள் காணாமல் போனது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை

கவிதாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். மகள் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். மகன் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். எனவே கவிதா தினமும் வேலைக்கு செல்லும் போது வீட்டு சாவியை, கதவுக்கு அருகில் உள்ள ஒரு ஆணியில் மாட்டி விட்டு செல்வாராம். மாலையில் அவர் வருவதற்கு முன் மகன் வந்து வீட்டை திறந்து வீட்டில் இருப்பார். நேற்று கவிதா முன்கூட்டியே வீட்டுக்கு வந்தாராம். அப்போதுதான் வீடு திறந்து கிடந்துள்ளது.

இதற்கிடையே கவிதாவின் வீட்டுக்கு உறவினர்களும், நண்பர்களும் சிலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே நகைகள் கொள்ளை போனது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். எனவே கவிதா வீட்டில் நகைகள் திருட்டு போனது தொடர்பாக ஒருசிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். எனவே நகை திருடிய நபர்கள் இன்றோ, நாளையோ கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story