முதியவரிடம் நகை பறிப்பு
கூடப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் முதியவரிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர், திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் கூடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கரும்பு ஜூஸ் பார்சல் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து மனோகரன் ஜூசை பார்சல் கட்டும் போது 2 வாலிபர்களில், ஒருவர் திடீரென மனோகரன் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story